அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெல்லிக்குப்பத்தில் தி.மு.க., வேட்பாளர் ரமேஷ்

Added : ஏப் 15, 2019
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் நகரத்தில், கடலூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ரமேஷ் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டார்.நெல்லிக்குப்பம் சரவணபுரத்தில் ஆரம்பித்து, ஜீப் மூலம் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தி.மு.க., மாவட்ட செயலாளர் கணேசன் நகர செயலாளர் மணிவண்ணன் திரைப்பட தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன், காசிநாதன், காங்கிரஸ் தலைவர் திலகர், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர்கள் புலிகொடியான், திருமார்பன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம் நகர செயலாளர் பிரகாஷ் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் கார்த்தி, மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் அலிஉசேன், த.மு.மு.க., நகர செயலாளர் ஜப்பார், மா. கம்யூ., சுப்ரமணியன் உட்பட பலர் உடன் சென்றனர்.வேட்பாளர் ரமேஷ் பேசுகையில் 'மதச்சார்பற்று ஒற்றுமையாக மக்கள் வாழ்வதற்கு காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும். அதேபோல் தமிழகம் வளர்ச்சி பெற தி.மு.க., ஆட்சி வர வேண்டும். எனவே தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதன் மூலம் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்' என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X