'என்னை தலைவராக்கிய சிவகங்கை': கமல் நினைவலை

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 சிவகங்கை,   கமல்  நினைவலை

சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், மக்கள் நீதி மையம் வேட்பாளர், சினேகனை ஆதரித்து பேசுவதற்காக, கட்சியின் தலைவர் கமல், கருப்பு பேன்ட், டீ - ஷர்ட் அணிந்து மேடைக்கு வந்தார்.'டார்ச் லைட்' உடன் வந்த கமல், மக்களை பார்த்து, 'லைட்' அடித்து கையசைத்தார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிற்க வேண்டும் என, கமலிடம் தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர்.கமல் பேசுகையில், 'மற்ற கட்சிகளின் கூட்டங்கள், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டன. 'ஆனால், மக்கள் நீதி மையத்திற்கென யாரையும் அழைக்காமல் தொண்டர்கள் தானாக வருகின்றனர். என் சித்தப்பா, சிவகங்கையில் தான் ஆசிரியராக இருந்தார். 'இங்கு தான் நானும் தங்கி, நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன். நான் தலைவராக வர, துாண்டுகோலாக இருந்த நகரம் சிவகங்கை. இங்கு தான் அதற்கான தகுதியை வளர்த்து கொண்டேன்' என்றார்.கூட்டம் முடிந்ததும், 'தொண்டர்கள், இங்கு சேர்ந்த குப்பையை அகற்றிவிட்டு தான் செல்ல வேண்டும். 'அதே போன்று வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை. பணத்திற்காக ஓட்டு போடுவதை தவிர்த்து நேர்மையாக, உண்மையாக ஓட்டளியுங்கள்' என, ஆலோசனை வழங்கினார்.- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Kumar - Chennai,இந்தியா
16-ஏப்-201909:56:21 IST Report Abuse
Vasanth Kumar ஒரு மாற்றம் நாட்டின் முன்னேற்றம்
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
15-ஏப்-201914:15:53 IST Report Abuse
natarajan s அது சினிமாகாரனையும் அவருடன் வரும் மாஜி நடிகைகளையும் பார்க்க வந்த கூட்டம். இவர்களால் எந்த மாற்றைத்தையும் கொண்டுவர முடியாது. திராவிட கட்சிகள் மக்களை எவன் என்ன கொடுப்பான் என்றே எதிர்பார்க்க வைத்து அடிமைகளாவே இருக்கிறார்கள், மாற்றுவது மிக கடினம்
Rate this:
Share this comment
Cancel
SELF -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-201908:46:38 IST Report Abuse
SELF சின்ன பையனாக இருந்த போதே சினிமாவில் நன்றாக நடித்து புகழ் எடுத்தாய் பெரிய பையனாகவும் ஹீரோவாக ஆன பின்பு நல்ல நல்ல படங்களில் நடித்து புகழ் பெற்றாய்.‌ உனக்கு எதுக்கு பா அரசியல் எல்லாம். நீ வந்து என்ன .சீர்திருத்தம் செய்ய போகிறாய். திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை நீங்களோ சீமான் போன்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு கஸ்தூரி போன்ற கிழவிகளின் ஆதரவு வேறு. சரத்குமாருக்கு கிடைத்த 700 ஓட்டுக்கள் ஆவது உங்கள் வேட்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X