சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆபாச படமெடுத்து காதலிக்கு மிரட்டல் மடிப்பாக்கம் மாணவர்களுக்கு, 'போக்சோ'

Added : ஏப் 15, 2019
Advertisement

சென்னை : காதலித்த பெண்ணுடன், நெருக்கமாக இருந்த போது, நண்பனை வைத்து, ஆபாச படமெடுத்து, தங்களின் இச்சைக்கு மிரட்டிய கல்லுாரி மாணவர்கள் இருவரை, போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.மடிப்பாக்கத்தைச் சேர்ந்த, 17 வயது இளம்பெண், தனியார் இன்ஜி., கல்லுாரியில், முதலாம் ஆண்டு படிக்கிறார்.பள்ளிக்கரணை, நாராயணபுரம், குளக்கரை, 2வது தெருவை சேர்ந்தவர் ஸ்ரீநாத், 20, தனியார் இன்ஜி., கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், மாணவிக்கு திருமண ஆசை காட்டி, தன் வீட்டிற்கு அழைத்து சென்று, ஸ்ரீநாத் நெருக்கமாக இருந்துள்ளார்.அதை, சக கல்லுாரி நண்பரான, வேளச்சேரி, காந்திசாலை, கிழக்கு மாடவீதியைச் சேர்ந்த யோகேஷ், 19, என்பவர் மூலம், புகைப்படம் எடுத்து வைத்திருந்தார். அந்த புகைப்படத்தை, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக கூறி, மாணவியை தங்களின் இச்சைக்கு அடிபணியும்படி, இருவரும் மிரட்டியுள்ளனர். மேலும், புகைப்படங்களை தர, கணிசமான தொகை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, அந்த மாணவி, தன் பெற்றோரிடம் கூறினார். மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மாணவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது.போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மாணவியை, அவர்கள் புகைப்படம் எடுத்து மிரட்டியது தெரியவந்தது.இருவரையும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X