பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை

Added : ஏப் 15, 2019
Advertisement
 எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில்  பறக்கும் படையினர் அதிரடி சோதனை

சென்னை : வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் இருந்து, தொகுதி வாரியாக பணம் பிரிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர்.லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்னும் மூன்று நாட்களில் நடக்க உள்ளன. இதனால் வாக்காளர்களின் ஓட்டுக்களை வளைக்க, அரசியல் கட்சியினர், பரிசுப்பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா செய்வதாக, தகவல்கள் வெளியாகின.
இதனால், 77 தேர்தல் பறக்கும் படை மற்றும், 77 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சென்னையில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகள், பெரம்பூர் சட்டசபை தொகுதி ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் பெரம்பூர் சட்டசபை தொகுதிவாரியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் பணம் பிரிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று இரவு, 10:30 மணியில் இருந்து எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் அதிரடி சோதனை நடந்தது.'பி பிளாக்'கில் உள்ள, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் விடுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர்.வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரின் விடுதியிலும், சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அங்கு, பணம் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து, தகவல்களை வெளியிடாமல், தேர்தல் பறக்கும் படையினர் ரகசியம் காத்தனர். இரவு, 10:30 மணி முதல் நள்ளிரவு வரை சோதனை நடந்ததால் சேப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X