அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெரியகுளம் தொகுதியில் 'ஆறு முருகன்' போட்டி

Added : ஏப் 15, 2019
Advertisement
பெரியகுளம் தொகுதியில்  'ஆறு முருகன்' போட்டி

தேனி மாவட்டம், பெரியகுளம் - தனி, சட்டசபை தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த, டாக்டர் கதிர்காமு, தினகரனுக்கு ஆதரவளித்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், இத்தொகுதிக்கு ஏப்., 18ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., வேட்பாளராக முதலில், முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார். அவர், அரசு பணியை ராஜினாமா செய்யாததால், வேட்பாளராக மயில்வேல் அறிவிக்கப்பட்டார்.அ.தி.மு.க., சார்பில் அவர், தி.மு.க., சரவணக்குமார், அ.ம.மு.க., கதிர்காமு, சுயேச்சைகளான பாலசுப்பிரமணியன், சிவசுப்பிரமணியன், பழனிசாமி என, மொத்தம் ஆறு வேட்பாளர்களின் பெயர்கள், முருகன் பெயரை குறிப்பிடும்படி அமைந்துள்ளன. இங்கு மொத்தம், 13 பேர் களத்திலுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X