பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான நிறுவனத்தில் 'ரெய்டு'

Added : ஏப் 15, 2019
Advertisement

சென்னை : தங்களுக்கு மிகவும் நெருக்கமான, கட்டுமான நிறுவனத்தில், வருமான வரித்துறை சோதனை நடத்தியதால், கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் பணியில், அமைச்சர்கள் வேகம் காட்டதுவங்கியுள்ளனர். லோக்சபா தேர்தல் மற்றும், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு, அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - .மு.தி.க., - த.மா.கா., - புதிய நீதி கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. லோக்சபா தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு, 20 தொகுதிகளை ஒதுக்கிய, அ.தி.மு.க., 20ல் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

தேர்தலில், தங்கள் ஆதரவாளர்களுக்கு, 'சீட்' கிடைக்காததால், சில அமைச்சர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், கண்துடைப்பிற்காக, தேர்தல் வேலைகளை செய்கின்றனர்.குறிப்பாக, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில், தேர்தல் வேலைகளை பார்க்காமல், இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில், அவர்கள் முகாமிட்டு உள்ளனர். தேர்தல் செலவுக்கு, பணமும் தருவதில்லை. இதனால், கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க., வேட்பாளர்களும், அமைச்சர்கள் மீது, அதிருப்தியில் உள்ளனர்.

அவர்கள் மீது, டில்லி பா.ஜ., மேலிடத்திடம், கூட்டணி கட்சியினர் புகார்கள் அனுப்பினர்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, பி.எஸ்.கே., என்ற நிறுவனம், தமிழக அரசின், பல துறைகளில், கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளனர். பல நிறுவனங்கள், அரசு கட்டுமான ஒப்பந்த பணிகளை எடுத்தாலும், பி.எஸ்.கே., நிறுவனத்திற்கு மட்டும், செலவு தொகையை, உடனுக்குடன் வழங்குமாறு, துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, அமைச்சர்கள் சிபாரிசு செய்வர்.

இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர், சில தினங்களாக, சோதனை நடத்தி வருகின்றனர். அதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் பின்னணி குறித்து, அமைச்சர்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளிடம் விசாரித்துள்ளனர். அதில், 'தேர்தல் பணியில், அமைச்சர்கள் ஆர்வம் காட்டாததால் தான், அவர்களுக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனத்தில், வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். 'அதன் தொடர்ச்சியாக, அந்நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களிலும், வரித்துறை ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது' என, அமைச்சர்களுக்கு, தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, காலை முதல் இரவு வரை, கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் பிரசாரத்திற்கு செல்வது, தங்கள் சொந்த பணத்தில் இருந்து, கட்சியினர் மற்றும் முகவர்களின் செலவுக்கு பணம் தருவது என, தேர்தல் பணியில், அமைச்சர்கள், திடீரென, வேகம் காட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X