கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ரூ. 9.90 க்கு இழப்பீடு 10 ஆயிரம்: சென்னை ஓட்டலுக்கு உத்தரவு

Added : ஏப் 15, 2019
Advertisement

சென்னை:ஓட்டலில் சாப்பிட்ட நுகர்வோரிடம், 9.90 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில், 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி, ராஜீவ் நகரைச் சேர்ந்தவர், தபேர் ஆலம், 50. இவர், பணி நிமித்தமாக சென்னை வந்தார். சேவை கட்டணம்அண்ணாசாலையில் உள்ள ஒரு ஓட்டலில், இரவு உணவு சாப்பிட சென்றார்.இவருக்கு வழங்கப்பட்ட, 'பில்'லில், 9.90 ரூபாய் சேவை கட்டணம் என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை கொடுக்க மறுத்தார். ஓட்டல் ஊழியர்கள், கட்டாயப்படுத்தி, சேவை கட்டணம் வசூலித்தனர். இதையடுத்து, சேவை கட்டணம் வசூலிப்பது முறைகேடானது, கட்டணத்துடன், ௧ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், தபேர் ஆலம் வழக்கு தொடர்ந்தார்.

விசாரணையில், ஓட்டலின் சார்பில், யாரும் ஆஜராகவில்லை.வழக்கு செலவுவழக்கில் நீதிபதி, மோனி, நீதித்துறை உறுப்பினர்கள் அமலா, பாஸ்கர குமாரவேல் பிறப்பித்த உத்தரவு:ஓட்டல் நிர்வாகத்தின் சேவையில், குறைபாடு உள்ளது. மனுதாரரிடம் வசூலித்த சேவை கட்டணம், 9.90 ரூபாயை திரும்ப வழங்க வேண்டும். அத்துடன், இழப்பீடாக, 10 ஆயிரம் ரூபாய, வழக்கு செலவாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X