அ.தி.மு.க.,பிரமுகரிடம் ரூ.12 லட்சம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,பிரமுகரிடம் ரூ.12 லட்சம் பறிமுதல்

Added : ஏப் 15, 2019

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.தி.மு.க., பிரமுகரிடம் இருந்து 12 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.மானாமதுரை சட்டசபை தொகுதிக்குட்பட்ட கட்டிக்குளம் கிராமத்தில் அ.தி.மு.க.,வினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்க வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெயராமன் தலைமையிலான அதிகாரிகள் அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்தனர்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே ஏரியூரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் நீதிதேவனிடம் இருந்து 12 லட்ச ரூபாயை பறிமுதல் செய்து மானாமதுரை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
மானாமதுரை நாகலிங்க நகரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் நமச்சிவாயம் வாக்காளர்களுக்கு வழங்க பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து காரைக்குடியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து பணம் எதுவும் கிடைக்காததால் திரும்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X