குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (1)
 குறையும் பெரியாறு அணை நீர்மட்டம்

கூடலுார் : பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து, நேற்று காலை நிலவரப்படி 112.20 அடி (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 கன அடி இருந்தது. தமிழகப்பகுதிக்கு 100 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1263 மில்லியன் கன அடி.கோடையில் தேக்கடி சற்று குளுமையாகவே இருக்கும். ஆனால் சில நாட்களாக வெப்பக்காற்று வீசுகிறது.
நீர்மட்டம் குறைந்துள்ளதால், தேக்கடி படகு நிறுத்தப்பகுதி குளம் போல் மாறிவிட்டது. ஆனால் படகுகள் இயக்குவதில் பாதிப்பில்லை.வைகை அணை நீர்மட்டம் 41.92 அடி (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. நீர்திறப்பு 60 கன அடி. நீர் இருப்பு 1109 மில்லியன் கன அடி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X