கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதிய பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதிய பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள்

Added : ஏப் 15, 2019
 கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதிய பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள்

புதுச்சேரி:புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளி மாணவர்கள் 367 பேர் கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதினர்.புதுச்சேரி, பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆங்கிலம் சரளமாக பேசும் வகையில் கேம்பிரிட்ஜ் ஆங்கில பள்ளி பாடத்திட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ரேடியன்ட் நாலேஜ் சர்வீஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையில் 4,500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் செய்து வந்தார்.கேம்பிரிட்ஜ் ஆங்கில பள்ளி பாடத்திட்ட பயிற்சி நான்கு நிலைகளாக அளிக்கப்பட்டது. இதில், 367 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனையடுத்து புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் மாணவர்கள் கேம்பிரிட்ஜ் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் கேம்பிரிட்ஜ் சான்றிதழ் வழங்கப்படும்.தேர்வுக்கான ஏற்பாடுகளை ரேடியன் நாலேஜ் சர்வீசஸ் நிறுவனத் தலைவர் காயத்ரி சபிதா செய்திருந்தார். நான்கு நிலைகளிலும் தேர்ச்சி பெறும் மாணவர்கள், கேம்பிரிட்ஜால் வழங்கப்படும் சான்றிதழ்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டு வேலை வாய்ப்புகளில் விசா வழங்குவதில் முன்னுரிமை அளிக்கபடுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X