சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர் பட்டியல் 5,000 காகிதம் வீண்

Added : ஏப் 15, 2019
Advertisement

சென்னை:வேட்பாளர் பெயரில் பிழை ஏற்பட்டதால், தென் சென்னை தொகுதியில், 5,000 பட்டியல் காகிதங்கள் வீணாகின.

லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, 18ம் தேதி நடக்க உள்ளது. தென் சென்னை தொகுதியில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில், 1,888 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.ஓட்டு இயந்திரத்தில், பட்டியல் பொருத்தும் பணி, ஆறு இடங்களில் நடைபெறுகிறது. இதற்காக, முதற்கட்டமாக, 5,000 காகிதங்கள் அச்சடிக்கப்பட்டன.

இந்த பணி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவரிடம் உள்ளது. அச்சடிக்கப்பட்ட பேப்பரில், ஒரு வேட்பாளர் பெயரில் பிழை ஏற்பட்டுள்ளது. இதனால், 5,000 காகிதங்கள் வீணாகின. இதையடுத்து, தென் சென்னை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் நேரடி பார்வையில், மீண்டும் அவை அச்சடிக்கப்பட்டன. அந்த பேப்பர், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X