பொது செய்தி

இந்தியா

குருநாம் இன்டர்நேஷ்னல் பள்ளி ஆண்டுவிழா

Added : ஏப் 15, 2019
Advertisement

வில்லியனுார்:கோர்க்காடு குருநாம் இண்டர்நேஷ்னல் உயர்நிலைப் பள்ளி முதலாம் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் அங்குதாஸ் தலைமை தாங்கினார். குருநாம் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் ரேகா வரவேற்றார். தலைமை ஆசிரியர் இளம்பிரசாத் ஆண்டறிக்கை வாசித்தார். புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். முருங்கப்பாக்கம் மதர் தெரசா உயர்நிலைப் பள்ளி தாளாளர் ஜார்சஸ் ராட்ச் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் குருநாம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ராமமூர்த்தி, திருமால், கன்னியப்பன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X