புதுச்சேரியை மோடி புறக்கணிக்கிறார்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 புதுச்சேரியை மோடி புறக்கணிக்கிறார்: முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு


புதுச்சேரி:'புதுச்சேரியை மோடி புறக்கணிக்கிறார்' என முதல்வர் நாராயணசாமி பேசினார்.
புதுச்சேரி லோக்சபா காங்., வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து, மணப்பட்டில் நடந்த பிரசாரத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது;இந்த தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டுமா. அல்லது ராகுல் வரவேண்டுமா என்பது தான் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்திற்கு மோடி எதையும் செய்வில்லை. புதுச்சேரியை புறக்கணித்தார். கேட்ட நிதியை தரவில்லை. கவர்னர் கிரண்பேடியை அனுப்பி அரிசி போட விடவில்லை. முதியோர் பென்ஷன், சென்டாக் பணம் தர விடவில்லை. ஊழியர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, சம்பளம் கொடுக்க விடவில்லை. விவசாய கடனை ரத்து செய்ய விடவில்லை. 15 ஆயிரம் பேருக்கு முதியோர் பென்ஷன் தரவேண்டும் என கூறினோம். அதை தடுத்து நிறுத்தினார். அரிசி போட வேண்டும் என்றால், பணமாக கொடுங்கள் என்றார். பணம் கொடுக்கக் கூடாது என்றால், அரிசி போடுவதற்கு காலம் கடத்தி, தகராறு செய்ததால், கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்தினோம். அதன்பிறகு கோப்பில் கையெழுத்து போட்டார். அரிசி வந்த நிலையில், தேர்தல் வந்து விட்டது. தேர்தல் முடிந்ததும் போடுங்கள் என்கின்றனர். தேர்தல் முடிந்த பிறகு அரசி போடப்படும். மோடி, கிரண்பேடி, என்.ஆர்.காங்., ஆகியோரின் தொல்லைகளை சமாளித்து புதுச்சேரி மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்.ராகுல் வந்தால் தான் எதிர்காலத்தில் பெண்கள் சுபிட்ஷமாக வாழ முடியும். அதற்கு காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
15-ஏப்-201914:27:16 IST Report Abuse
natarajan s திரு மோடி புதுச்சேரியை மட்டுமே புறக்கணித்தார் அகில இந்தியாவையும் புறக்கணித்து உலகம் சுற்றுகிறார் என்று குற்றச்சாட்டு. நீங்கள் இந்தியாவில் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X