புதுச்சேரியில் அதிகார போட்டி நடக்கிறது: என்.ஆர்.காங்., ரங்கசாமி குற்றச்சாட்டு

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019
Advertisement
 புதுச்சேரியில் அதிகார போட்டி நடக்கிறது:   என்.ஆர்.காங்., ரங்கசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி:மக்களுக்கு தேவையானவற்றை பற்றி சிந்திக்காமல், அதிகார போட்டி நடக்கிறது என ரங்கசாமி குற்றம் சாட்டினார்.புதுச்சேரி லோக்சபா என்.ஆர்.காங்., வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து, கட்சி தலைவர் ரங்கசாமி நேற்று மதியம் உழவர்கரை தொகுதியில் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வத்துடன் திறந்த வேனில் பிரசாரம் செய்த போது பேசியதாவது;மத்திய ஆட்சியுடன் ஒத்துபோகும் கட்சி புதுச்சேரியில் வெற்றி பெற்றால் தான் மாநில வளர்ச்சி பெற முடியும். புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசையும், கவர்னரையும், எதிர்கட்சிகளையும் குறை சொல்லி எந்த திட்டத்தையும் செய்யவில்லை.எதிர்கட்சிகளால் எப்படி திட்டங்களை தடுக்க முடியும்.
எதிர்கட்சிகள் குறைகளை தான் சுட்டி காட்ட முடியும். அதிகார போட்டி சண்டை தான் நடக்கிறது. மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை சிந்திப்பது கிடையாது. தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. வேலை வாய்ப்பிற்கு ஒரு தொழிற்சாலை கூட கொண்டுவரவில்லை. இலவச துணி, அரசி வழங்கவில்லை. கல் வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி சரிவர வழங்கவில்லை. புதுச்சேரியின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டுள்ளது.இலவச துணி, அரசி ஏன் வழங்கவில்லை என்றால், ராகுல் பிரதமரானால் வழங்குவோம் என கூறுகின்றனர். மாநில அரசு திட்டத்தை செயல்படுத்த, ராகுல் பிரதமராக வேண்டிய அவசியம் இல்லை. இந்த நிலை மாற ஜக்கு சின்னத்தில் ஓட்டுபோட்டு கே.நாராயணசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X