மக்கள் தான் எஜமானர்கள் சொல்கிறார் பன்னீர்செல்வம்

Added : ஏப் 15, 2019
Advertisement

சென்னை : ''தேர்தலில், மக்கள் தான் எஜமானர்களாகவும், நீதிபதிகளாகவும் செயல்படுகின்றனர்,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் பேசினார். திருவள்ளுர் லோக்சபா தொகுதி மற்றும், பூந்தமல்லி சட்டசபை தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பன்னீர்செல்வம், நேற்று மாலை, பிரசாரம் செய்தார். அப்போது, அவர் மேலும் பேசியதாவது: மத்தியில், தி.மு.க., - காங்கிரஸ் ஆட்சியில், தமிழகத்தை சேர்ந்த, 10 அமைச்சர்கள், கொலு பொம்மைகளாக இருந்தனர். அந்த கூட்டணி அரசு, தமிழக வளர்ச்சிக்காக, எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 'கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்' என, தெரிவித்தார். இதுவரை, ஆறு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. அனைவருக்கும், 2023க்குள், கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும், அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது. ஜெயலலிதா தெய்வமாக வானத்தில் இருந்து, ஆட்சியை எப்படி நடத்துகிறோம் என, பார்த்து வருகிறார். இதனால், நாங்கள் பயந்து ஆட்சி நடத்துகிறோம். தி.மு.க., ஆட்சியில் நில அபகரிப்பு, லஞ்சம், ஊழல் அதிகரித்து இருந்தது. இவ்வாறு, பன்னீர்செல்வம் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X