பொது செய்தி

இந்தியா

மணக்குள விநாயகர் கோவிலில் தங்ககலச அலங்காரம்

Added : ஏப் 15, 2019
Advertisement

புதுச்சேரி:தமிழ் புத்தாண்டையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தமிழ் புத்தாண்டை யொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் நேற்று காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. பின், 7.00 மணிக்கு, மூலவர் தங்ககவசம் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இந்த சிறப்பு அலங்காரத்தை காண, பக்தர்கள் தங்களின் குடும்பத்தாரோடு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து 7.30 மணிக்கு தீபாராதனையும், 8.00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. பகல் 12.00 மணிக்கு அன்னதானமும், இரவு 7.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X