அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகளை ஏமாற்ற 'மைக்ரோ லெவல்' பட்டுவாடா! 10 நிமிடங்களில் முடியுது, 'கவனிப்பு'

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (32)
Advertisement

லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்கள் எதிர்பார்த்த பணப் பட்டுவாடாவை கட்சிகள் துவக்கியுள்ளன. இதில், மதுரை, தேனி தொகுதிகளில் எங்கு பார்த்தாலும், 'பணமழை' பொழிந்து வருகிறது.






என்ன தான், 'கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி' தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தாலும், பட்டுவாடாவை தடுக்க முடியாத அளவிற்கு, வியூகங்கள் அமைத்து, ஜோராக நடக்கிறது பண வினியோகம். தமிழகத்தில், 2009ல் நடந்த, திருமங்கலம் இடைத்தேர்தல் பண வினியோக, 'பார்முலா' பரபரப்பாக பேசப்பட்டது. தேர்தல் கமிஷனின் கண்களில் மண் துாவி, பல்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு, தி.மு.க., பணப் பட்டுவாடா செய்தது, தேசிய அளவில் பேசப்பட்டது.

அப்போதிருந்த, மாநில தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, 'பீஹார் உள்ளிட்ட, வட மாநிலங்களில் கூட தேர்தலை நடத்தி விடலாம். ஆனால், தமிழகத்தில் நடத்துவது கடினம்' என, அதிருப்தி தெரிவித்தார். இதன் விளைவாக, தமிழகத்தில், 'திருமங்கலம் பார்முலா' என்ற ஒன்று உருவானது. இப்போது நடக்கும் லோக்சபா தேர்தலில், பணம் வினியோகத்தில், திருமங்கலம் பார்முலாவை விஞ்சும் வகையில், 'மைக்ரோ லெவல்' பட்டுவாடா முறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது; வினியோகமும் துவங்கி விட்டது.


பூத் சிலிப் இல்லை:


இந்த முறைப்படி, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவரிடம், பூத் சிலிப் இருக்காது. பணத்தை வைப்பதற்கான கவர் இல்லை. கட்சி நிர்வாகிகளின் சட்டை பையில் அதிகபட்சம், 3,500 ரூபாய் மட்டுமே இருக்கும். தேர்தல் கமிஷன், 'பொறி' வைத்து பிடித்தால், 'மளிகை கடைக்கு சாமான் வாங்க போறேன்... ஜவுளி கடைக்கு துணி எடுக்க போறேன்...' என, நழுவி விடுகின்றனர். '3,500 ரூபாய் தானே' என, தேர்தல் அதிகாரிகளும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், அதில் தான், 'சூட்சமம்' இருக்கிறது.


'மைக்ரோ லெவல்':


தமிழகத்தின் பிரதான கட்சி ஒன்று, 40 லோக்சபா தொகுதிகளிலும், தலா, 10 லட்சம் வாக்காளர்களுக்கு, தலா, 500 ரூபாய் பட்டுவாடா செய்ய, அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து விட்டது. இம்மாதம், 13ம் தேதியே, மதுரை தொகுதியில் பட்டுவாடா துவங்கி விட்டது. இதன் அடிப்படையில், 1,000 வாக்காளர்களுக்கு, ஐந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேருக்கும் கீழ், தலா, எட்டு துணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர். இதன்படி பார்த்தால், ஒரு துணை பொறுப்பாளர், 25 வாக்காளர்களுக்கு மட்டுமே பணம் பட்டுவாடா செய்தால் போதும்.





அதிலும் துணை பொறுப்பாளர், ஒரு, 'எடுப்பு' பொறுப்பாளரை வைத்துக் கொள்வதால், ஒருவர், 12 அல்லது 13 வாக்காளர்களுக்கு மட்டுமே பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட துணை பொறுப்பாளர், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள குறிப்பிட்ட, அந்த, 12 அல்லது 13 பேரை நன்கு தெரிந்து வைத்திருப்பதால், பூத் சிலிப், முகவரி தெரியும் வகையில், ஆவணங்கள் வைத்துக் கொள்வதில்லை.

சாதாரணமாக, ஏரியாவிற்குள் சென்று, பணத்தை வாக்காளர் கையில் திணித்து விடுகின்றனர். 'கவர்' பயன்படுத்துவதில்லை. திருமங்கலம் பார்முலாவில், ஒரு கட்சி நிர்வாகி, 100 வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தார். ஆனால், 'மைக்ரோ லெவல்' முறையில், ஒரு நிர்வாகி, 12 பேருக்கு மட்டும் பணத்தை வினியோகித்தால் போதும் என்பதால், ஒரு பகுதியில், 10 நிமிடங்களில் பட்டுவாடா முடிந்து விடுகிறது. இந்த நுாதன திட்டத்தால், தேர்தல் அதிகாரிகள், பட்டுவாடாவை கண்டுபிடிக்கவும், தடுக்கவும் திணறி வருகின்றனர்.


கட்சி பணத்திலும் கமிஷன்:


தேர்தலில் வேட்பாளருக்கு, 'சீட்' கொடுக்கும் போதே, 10 லட்சம் வாக்காளர்களுக்கு மட்டும் கட்சி சார்பில் பணம் கொடுக்கப்படும். தேர்தல் செலவை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் டீலிங்காம். ஆனால், கட்சி வழங்கிய, 500ல், 300 ரூபாய் மட்டும் வாக்காளர்களுக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள, 200 ரூபாயை தேர்தல் செலவிற்கு ஒதுக்கி விட்டார்களாம், விபரமான சில வேட்பாளர்கள். 'மைக்ரோ லெவல்' பார்முலா என்றாலும், கமிஷன் பார்முலா மட்டும் மாறவில்லையே என, நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-201900:15:20 IST Report Abuse
Krishnamoorthy வாக்காளர்கள் எதிர் பாக்குறாங்கனு அபத்தமா போடுரது நல்லவா இருக்கு??
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
15-ஏப்-201914:37:49 IST Report Abuse
Darmavan இதெற்கெல்லாம் ஒரே வழி கோர்ட் மூலம் இந்த அரசியல் வியாதிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை நிறுத்தினால் MLA /MP பதவிகளின் வசீகரத்தை எடுத்துவிட்டால் இந்த ஊழல்குறையும்
Rate this:
Share this comment
Cancel
Narayanan Sakthi - Nemathanpatti,இந்தியா
15-ஏப்-201914:24:23 IST Report Abuse
Narayanan Sakthi எங்க தொகுதியில் முறையா அந்தப்பணம் போய்சேருவதில்லை - இதிலேயே பாதிக்குமேல் கொடுப்பவன் எடுத்துக்கொள்கிறான். எனவே அவனை தனியாக கவனித்தால் அவன் மக்களை முறையாக கவனிப்பான் இல்லை என்றால் ஊ ஊ ..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X