காங்., அமைச்சரவையை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: அன்பழகன் எம்.எல்.ஏ., பிரசாரம்

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019
Advertisement

புதுச்சேரி:இல்லாத அதிகாரங்களை உச்சநீதிமன்றம் மூலம் கவர்னர் மற்றும் நியமன எம்.எல்.ஏ.க் களுக்கு வாங்கி கொடுத்தவர் ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., என அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.

என்.ஆர்.காங்., வேட்பாளர் கே. நாராயணசாமியை ஆதரித்து, அ.தி.மு.க. சட்டசபை தலைவர் அன்பழகன் ராஜ்பவன் தொகுதியில் பிரசாரம் செய்து பேசியதாவது;மக்களுக்கு ஒரு சிறு நன்மையை செய்யாத பலவீனமான காங்., அரசுக்கு மக்கள் சரியான தீர்ப்பு அளிக்க வேண்டும். கோமா நிலைக்கு தள்ளிய காங்., அமைச்சரவையை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இளைஞர்களுக்கு ரங்கசாமி வழிவிடுவாரா என கேட்கின்றனர். கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நமச்சிவாயத்தை காண்பித்து காங்., 15 இடங்களை பெற்றவுடன் குறுக்குவழியில் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் பதவியை பறித்து கொண்ட நாராயணசாமியை நேரடியாக குற்றம்சாட்டாமல், என்.ஆர்.காங்., தலைவரை பற்றி மறைமுகமாக ஏன் நமச்சிவாயம் பேச வேண்டும்.70 வயதான முதல்வர் நாராயணசாமியை, பதவியை விட்டு விலக வேண்டும் என நமச்சிவாயம் கேட்பது நியாயமற்றது.புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதா, ஆண்டிற்கு 10 ஆயிரம் பேர் பி.டெக், பி.இ. படித்து வெளியே வருகின்றனர். ஒருவருக்காவது வேலை வாய்ப்பை அரசு உறுதி செய்துள்ளதா. படித்த இளைஞர்கள் குடும்ப சூழலை கருதி துணிக்கடை, ஓட்டல்களில் வேலை செய்கின்றனர். இது இளைஞர்களுக்கு அரசு செய்யும் துரோகம்.ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., அவரது பணியை பார்க்காமல், மூன்று ஆண்டுகளாக அரசு வழக்கறிஞர் பணி செய்து வருகிறார். மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.,வாக நியமித்தது. இதற்கு அரசு நீதிமன்றம் செல்லாமல், எம்.எல்.ஏ.,வான இவர் நீதிமன்றம் செல்வது எந்த விதத்தில் நியாயம்.வழக்கு போட்டு, தோல்வி பெற்று, இல்லாத அதிகாரங்களை உச்சநீதிமன்றம் மூலம் கவர்னர் மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு வாங்கி கொடுத்த ஒரே பணியை ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ., செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X