மத்திய, மாநில அரசுகளுக்கு பாலமாக இருப்பேன்: மக்கள் நீதி மைய வேட்பாளர் வாக்குறுதி | Dinamalar

மத்திய, மாநில அரசுகளுக்கு பாலமாக இருப்பேன்: மக்கள் நீதி மைய வேட்பாளர் வாக்குறுதி

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019


புதுச்சேரி:புதுச்சேரி மாநில தேவைகள் பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க 'டார்ச் லைட்'க்கு வாக்களிக்குமாறு மக்கள் நீதி மைய வேட்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி லோக்சபா தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் நேற்று ஊசுடு மற்றும் மண்ணாடிப்பட்டு தொகுதிகளில் பிரசாரம் செய்தபோது பேசியதாவது:புதுச்சேரி, லோக்சபா தேர்தலில், இரு முனைப் போட்டி என கருதப்பட்டது. மக்கள் நீதி மைய வேட்பாளராக என்னை, கமல்ஹாசன் அறிவித்தவுடன் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கமல்ஹாசன் உரையாற்றிய பின், மும்முனைப் போட்டியில், நான் முதலாவதாக உள்ளது தெரிய வந்துள்ளது. அதற்கு காரணம் நீங்கள் தான். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருப்பேன். மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் எதுவும் தடைபடாமல் அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படாமல் உள்ளது. காங்.,- என்.ஆர்.காங்., கட்சிகளால் கிடப்பில் போட்டுள்ள சேதராப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேடன்.ஒவ்வொரு, பாராளுமன்ற கூட்டத் தொடர் துவங்கும் முன்பு, பாராளுமன்றத்தில் நான் பேச வேண்டியது குறித்து, புதுச்சேரி மக்களிடம் கருத்து கேட்பேன்.அதேபோல், புதுச்சேரி அமைச்சர்கள், சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.,க்களிடமும் கருத்துகளை கேட்டு, பாராளுமன்றத்தில் பங்கேற்று தெரிவிப்பேன் என பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X