26ல் பிரதமர் வேட்பு மனு தாக்கல்

Added : ஏப் 15, 2019
Advertisement

வாரணாசி : உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள, பிரதமர் நரேந்திர மோடி, வரும், 26ல் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இந்த தொகுதியில், பிரதமர் மோடிக்கு எதிராக, காங்., பொதுச் செயலர் பிரியங்கா போட்டியிடக் கூடும் என, தகவல் வெளியாகியுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் எட்டு தொகுதிகளுக்கு, தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள, 72 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. பேரணி பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி லோக்சபா தொகுதியில், அடுத்த மாதம், 12ல் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தொகுதியில், வரும், 25 மற்றும் 26ல் நடக்கும் பேரணி மற்றும் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி வருகிறார். அப்போது, 26ல், பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். நேற்று முன்தினம், உ.பி., மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, காங்., கட்சி வெளியிட்டது. ஆனால், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. விலகினர்பிரதமர் மோடிக்கு எதிராக, காங்., மூத்த தலைவர் சோனியாவின் மகளும், உ.பி., மாநில கிழக்கு பகுதி பொதுச் செயலரான பிரியங்கா போட்டியிடக்கூடும் என, காங்., கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக, முன்னாள் நீதிபதி, கர்ணன், பீம் சேனா தலைவர் சந்திரசேகர் ஆசாத், பிரதமர் மோடி போன்ற தோற்றம் உள்ள அபிநந்தன் பதக், ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட, தேஜ் பஹதுார் யாதவ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.பிரதமர் மோடிக்கு எதிராக, 111 தமிழக விவசாயி கள் போட்டியிடுவதாக கூறப்பட்டது. ஆனால், பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பின், அவர்கள் போட்டியில் இருந்து விலகினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X