அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலில், 'தூள்' கிளப்பும் 'ஹாம் ரேடியோ!'

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 தேர்தலில், 'தூள்' கிளப்பும் 'ஹாம் ரேடியோ!'

மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில், 'மொபைல் போன் சிக்னல்' இல்லாத இடங்களில், 'ஹாம் ரேடியோ' என்ற, ஒயர்லெஸ் கருவி வழியே, தகவல்களை பரிமாற, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, தனியாக மொபைல் போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மொபைல் போன் சிக்னல் கிடைக்காத, மலைப் பகுதிகள், தீவுகள் போன்ற இடங்களில், ஓட்டுப்பதிவை நடத்த, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில், தகவல்களை உடனுக்குடன் பரிமாறும் வகையில், ஹாம் ரேடியோ என்ற, ஒயர்லெஸ் கருவியை பயன்படுத்த, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மட்டும், நான்கு தொகுதிகளுக்கு உட்பட்ட, 31 பகுதிகளில், ஹாம் ரேடியோ பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் வழியே, 31 ஹாம் ரேடியோ உரிமதாரர்கள், இந்த பணியில் ஈடுபட, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தகவல்களை, கட்சிகள் ஒட்டு கேட்காத வகையிலும், ஹாம் ரேடியோ வழியாக, பாரபட்சமான தகவல்களை அளிக்காமல் இருக்கவும், தேர்தல் ஆணையம் உத்தரவாதம் பெற்றுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-ஏப்-201903:17:16 IST Report Abuse
 nicolethomson ஹாம் ரேடியோ ஒரு அசுரன் மாதிரி நல்லவர்களின் கையில் அது சூப்பர் டிவைஸ் , பாலைவனத்தான் கையில் இருந்தா அது கொலைக்கருவி மாதிரி
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201907:26:11 IST Report Abuse
Bhaskaran மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி ஹாம் ரேடியோ உறுப்பினர் ஒருசமயம் அவர் பிரதமராக இருக்கும்போது வெள்ளம் பற்றிய விவரங்களை ரேடியோ மூலம் அப்பகுதியில் இருக்கும் ஹாம் உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X