அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் விதிமுறை மீறி திருமாவளவன், 'போஸ்டர்'

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 தேர்தல் விதிமுறை மீறி திருமாவளவன், 'போஸ்டர்'

தேர்தல் விதிமுறையை மீறி, தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒட்டிய, திருமாவளவனின் புகைப்படத்துடனான போஸ்டர் குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அம்பேத்கரின், 128ம் பிறந்த நாளை ஒட்டி, தாம்பரம் ரயில் நிலையத்தில், 'ரயில்வே தொழிலாளர் முன்னணி, ரயில் ஓட்டுனர்கள் தெற்கு ரயில்வே' என்ற பெயரில், போஸ்டர்கள் அடிக்கப்பட்டு உள்ளன.அதில், அம்பேத்கர், புத்தர் படங்களுடன், வி.சி., தலைவர், திருமாவளவனின் படமும் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர்கள், நிலைய அதிகாரி அறை, பிளாட்பாரங்கள் என, எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில், கட்சி தலைவர்களின் படங்கள், அரசு அலுவலகங்களின் வளாகங்களில் இருக்கக்கூடாது என, கட்டுப்பாடு உள்ள நிலையில், நிலையம் முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, தேர்தல் விதிமீறலாகும்.இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க, தேர்தல் பார்வை யாளருக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-201921:32:06 IST Report Abuse
Bhaskaran பிரபாகரனுக்கு துப்பாக்கிசூடும் பயிற்சி இவர் அளிக்கிறாதைபோல் ஒரு போட்டோ ஒன்று செட்செய்துள்ளர்கள் அதை போட்டு வாக்குகேட்டிருக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
18-ஏப்-201903:23:10 IST Report Abuse
meenakshisundaram இவிங்களே திருத்தவே முடியாது, சமூகத்தோடே முன்னேறவே மாட்டாங்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X