பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு

Added : ஏப் 15, 2019
Advertisement

சென்னை:பணியின் போது இறந்த, தீயணைப்பு துறை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மும்பை விக்டோரியா துறைமுகத்தில், 1944 ஏப்., 14ல், நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது.தீயை அணைக்க கடுமையாக போராடிய, தீயணைப்பு வீரர்கள், 66 பேர் உட்பட, 220 பேர் பலியாகினர். அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், நாடு முழுவதும், ஆண்டு தோறும், ஏப்., 14ல், நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று தமிழகம் முழுவதும் உள்ள, தீயணைப்பு நிலையங்களில், 'தீ தொண்டு தினம்' என, நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.சென்னை எழும்பூரில் உள்ள, தீயணைப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அத்துறை, டி.ஜி.பி., காந்திராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.இந்த ஆண்டு, பணியின் போது இறந்த, தமிழக தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X