குப்பைக்கு வரி விதித்ததுதான் காங்., அரசின் சாதனை

Added : ஏப் 15, 2019
Advertisement

செல்வகணபதி எம்.எல்.ஏ., சாடல்
புதுச்சேரி:புதுச்சேரி லோக்சபா தேர்தல் பா.ஜ., என்.ஆர். காங்., கூட்டணி கட்சி வேட்பாளர் கே. நாராயணசாமியை ஆதரித்து, பா.ஜ., எம்.எல்.ஏ.,செல்வகணபதி லாஸ்பேட்டை பகுதியில் 'ஜக்கு' சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.புதுச்சேரி லோக்சபா என்.ஆர்.காங்., வேட்பாளர் கே. நாராயணசாமியை ஆதரித்து, பா.ஜ.,வை சேர்ந்த செல்வகணபதி எம்.எல்.ஏ., லாஸ்பேட்டை தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.அதன்படி, நேற்று லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது அவர் பேசியதாவது:''மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் மூலம்புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்ட இலவச எரிவாயு திட்டத்தில் 13 ஆயிரம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.இது போல், மத்திய அரசின் ஏராளமான நலத்திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் மூன்றாண்டு கால காங்., ஆட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தாத தாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் நாராயணசாமி மக்களை ஏமாற்றி வருகின்றார்.மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணத்தை உயர்த்தியது, குப்பைக்கு வரி விதித்ததுதான் காங்., அரசின் சாதனை. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி அயராது பாடுபட்டு வருகிறார். மீண்டும் பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைந்திட வேண்டும். அப்போது தான், காங்., ஆட்சியின் பிடியில் சிக்கி தவித்து வரும் புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.எனவே, புதுச்சேரி லோக்சபா தேர்தலில், பா.ஜ., ஆதரவு பெற்ற என்.ஆர்.காங்., வேட்பாளர் கே. நாராயணசாமிக்கு 'ஜக்கு' சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்திட வேண்டும்.இவ்வாறு செல்வகணபதி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X