புளு ஸ்டார் பள்ளி ஆண்டு விழா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புளு ஸ்டார் பள்ளி ஆண்டு விழா

Added : ஏப் 15, 2019

வில்லியனுார்:அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 34வது பள்ளி ஆண்டு விழா, கோல்டன் ஸ்டார்ஸ் கலைக்கூட திருவிழா மற்றும் விளையாட்டு தின பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வரலட்சுமி முன்னிலை வகித்து ஆண்டறித்தை வாசித்தார். பள்ளி துணை முதல்வர் சிவசெல்வம் வரவேற்றார். பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தமிழ்துறை தலைவர் சத்தியசீலன், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜெகன், பள்ளி நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினர்.விழாவிற்கு தலைமை தாங்கிய பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார், கோல்டன் ஸ்டார்ஸ் கலைக்கூடத்தை திறந்து வைத்து, ஆண்டுவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இறுதியில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.விழா ஒருங்கிணைப்பாளர் வேந்தன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X