பொது செய்தி

இந்தியா

தேர்தலை புறக்கணிக்க போவதாக கலெக்டரிடம் மனு

Added : ஏப் 15, 2019
Advertisement

காரைக்கால்:கிராமங்களுக்கு அடிப்படை வசதி செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கல்லறை பேட் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
காரைக்கால், கல்லறைப் பேட் கிராம மக்கள், கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:காரைக்கால் கல்லறைப்பேட் பகுதியில் 100க்கு மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றோம். ஆனால், இப்பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டும், மனைப்பட்டா கேட்டு தொடர்ந்து போராடிவருகின்றனர். ஆனால் எங்களிடம் ஓட்டு பெற்ற அரசியல் கட்சியினர் இதுவரை எங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யவில்லை. ஒரு குடிசைக்குள் மூன்று குடும்பங்களுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டு பல சமுக சிக்கல்களை அனுபவித்து வருகின்றோம்.நாங்கள், எங்கள் ஜனநாயகக் கடமையை செய்வதன் மூலம் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும் என பல ஆண்டுகளாக காத்திருந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றோம். எனவே ஜனநாயகத்தில் எங்கள் ஓட்டுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை என்பதால் வரும் லோக்சபா தேர்தலில் எங்கள் கிராம மக்கள் ஓட்டு போட விரும்பவில்லை.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X