பொது செய்தி

இந்தியா

ராகுல் பிரதமரானால் நாடு வளர்ச்சிப் பாதைக்கு செல்லும்

Added : ஏப் 15, 2019
Advertisement

காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் நம்பிக்கை
பாகூர்:'ராகுல் பிரதமரானால் மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும்' என காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேசினார்.
பாகூர் தொகுதியில் ஓட்டு சேகரித்தபோது அவர் பேசியதாவது;தற்போது நடைபெற உள்ள தேர்தல் மோடியா, ராகுலா யார் பிரதமர் என்பதை தேர்வு செய்யும் தேர்தல். மோடி, சில பணக்காரர்களின் நன்மைக்காக மட்டுமே தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், ராகுல் ஏழை, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரின் நலனுக்காக போட்டியிடுகிறார்.பிரதமர் மோடி நாட்டிற்கு என்ன நன்மை செய்தார் என்பதை, அக்கட்சியினரிடம் கேட்டு பாருங்கள். அவர்களால் பதில் கூற முடியாது. இதனை மாற்றிட வேண்டுமானால், ராகுலுக்கு ஓட்டு போடுவது தான் நமக்குள்ள ஒரே வழி. ராகுல் பிரதமரானால் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். 'நீட்' ரத்து செய்யப்படும். நம்முடைய குழந்தைகளின் கனவை நனவாக்க வேண்டும் என்றால், 'கை' சின்னத்திற்கு நீங்கள் ஓட்டு அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை இந்த ஆட்சியில் உச்சத்திற்கு சென்றுள்ளது.இவற்றை எல்லாம் மாற்றி, நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல ராகுல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே முடியும். எனவே, வரும் 18ம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 'கை' சின்னத்திற்கு ஓட்டு போட்டு, வெற்றி பெற செய்திட வேண்டும். இவ்வாறு வேட்பாளர் வைத்திலிங்கம் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X