குடிப்பதை கண்டித்ததால் தற்கொலை

Added : ஏப் 15, 2019
Advertisement

புதுச்சேரி:குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் அரசு பஸ் டிரைவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாரம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்,44; தமிழக அரசு போக்குவரத்து கழக டிரைவர். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய ஸ்ரீதர், பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீதர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அதனை அவரது மனைவி கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த ஸ்ரீதர், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.மற்றொரு சம்பவம்:திலாஸ்பேட்டை, அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜோசப் சதீஷ், 48; டிரைவர். இவரது மனைவி தீபா. குருமாம்பேட் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய ஜோசப் சதீஷ், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். கடந்த 12ம் தேதி, குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அதை அவரது மனைவி தீபா கண்டிக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் மன உலைச்சலில் இருந்த ஜோசப்சதீஷ், இரவு அனைவரும் துாங்கிய பின், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த இரு சம்பவங்கள் குறித்து கோரிமேடு போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X