பாலிடெக்னிக் மாணவர் மயங்கி விழுந்து சாவு

Added : ஏப் 15, 2019
Advertisement

புதுச்சேரி:கிரிக்கெட் விளையாடிய பாலிடெக்னிக் மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.வில்லியனுார் செந்தமிழ் நகரை சேர்ந்தவர் சண்முகம் மகன் கருணாகரன்,19; லாஸ்பேட்டையில் உள்ள பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் விடுமுறையையொட்டி வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் கருணாகரன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு வில்லியனுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X