இன்ஜினியரை தாக்கி கொள்ளை அரியாங்குப்பத்தில் துணிகரம்

Added : ஏப் 15, 2019
Advertisement

புதுச்சேரி:அரியாங்குப்பம் புதுப்பாலம் அருகே பொறியாளரை தாக்கி, செயின், பைக் மற்றும் மொபைல் போனை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அரியாங்குப்பம் சுப்பையா நகர், பாரதி வீதியைச் சேர்ந்தவர், ராமமூர்த்தி, 39. அபிேஷகப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன். இருவரும் நேற்று முன்தினம் இரவு 1:30 மணிக்கு, அரியாங்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.அரியாங்குப்பம் புதுப்பாலம் அருகே வந்தபோது, மொபைல்போனில் அழைப்பு வந்ததால், மோட்டார் சைக்கிளை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தார்.அப்போது எதிர் திசையில் இரண்டு பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள், ராமமூர்த்தி கழுத்தில் அணிந்திருந்த 5 கிராம் தங்க செயின், அவரது மொபைல் போன் மற்றும் பைக்கை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இது குறித்து ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீ சார் வழக்கு பதிந்து மர்ம நபர்கள் நான்கு பேரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X