காலாப்பட்டு சிறையில் மொபைல் போன் பறிமுதல்

Added : ஏப் 15, 2019
Advertisement

புதுச்சேரி:காலாப்பட்டு மத்திய சிறையில் விசாரணை கைதியிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், மொபைல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
இதனை தடுக்க சிறையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, இரண்டு நாட்களுக்கு முன் சிறை காவலர்கள், விசாரணை கைதிகள் அறைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சிறை கழிவறை அருகில், திருபுவனை போலீஸ் நிலைய வழக்கில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதி கார்த்திகேயன், மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்து, விசாரணை செய்ததில், லாஸ்பேட்டை ரவுடி கார்த்தி (எ) கார்த்திகேயனிடம் பேசியது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X