பொது செய்தி

இந்தியா

உலர் கண் நோய் சிகிச்சைக்கு

Added : ஏப் 15, 2019
Advertisement
 உலர் கண் நோய் சிகிச்சைக்கு

பாகூர்:பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பிள்ளையார்குப்பம் கஸ்துாரிபாய் காந்தி செவிலியர் கல்லுாரியில், உலர் கண்நோய் சிகிச்சைக்கான புதிய தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கண் சிகிச்சை மருத்துவர்கள் கூறுகையில்'' இந்தியாவில் 32 சதவீதம் மக்கள் உலர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவிலும் இந்நோயால் பெருவாரியான மக்கள் பாதித்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை, வெப்பம் மற்றும் குளிர் என இருவிதமான சிகிச்சைகளும் தனித்தனி கருவியால் அளிக்கப்பட்டு வந்தது.தற்போது, பிள்ளையார்குப்பம் கஸ்துாரிபாய் காந்தி செவிலியர் கல்லுாரியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொழில் நுட்பத்தின் மூலமாக உலர் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, வெப்பம், குளிர் என இருவித சிகிச்சையும் ஒரே கருவியின் மூலமாக அளிக்க முடியும். இது இந்தியாவிலேயே முதல் கண்டுபிடிப்பாகும் என்றனர். இந்த தொழில் நுட்பத்தை, கருவியாக தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழக துணை வேந்தர் சுபாஷ் சந்திர பரிஜா முன்னிலையில், கஸ்துாரிபாய் காந்தி செவிலியர் கல்லுாரிக்கும், மெடிசோன்ஸ் என்ற நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தானது. நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன், டீன்கள் ஆதித்யன், அனந்தகிருஷ்ணன், ரவிசங்கர், செவிலியர் கல்லுாரி முதல்வர் ரேணுகா, துணை பேராசிரியர் மோகன பிரியா கலந்து கொண்டனர். இந்த தொழில் நுட்பத்தை கண்டு பிடித்த கல்லுாரி முதல்வர் ரேணுகா, துணை பேராசிரியர் மோகனபிரியாவை, பாலாஜி வித்யா பீத் பல்கலைக்கழக வேந்தர் ராஜகோபால் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X