மாஜி எம்.பி., கண்ணன் ஆதரவு யாருக்கு

Added : ஏப் 15, 2019
Advertisement

புதுச்சேரி:முன்னாள் எம்.பி., கண்ணன் தனது ஆதரவு யாருக்கு என்பதை நாளை (16ம் தேதி) அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுச்சேரி முன்னாள் எம்.பியான கண்ணன், ஏற்கனவே புதுச்சேரி மக்கள் காங்., புதுச்சேரி முன்னேற்ற காங்., என தனி கட்சிகள் தொடங்கியவர். பின், அக்கட்சியை கலைத்து விட்டு மீண்டும் காங்.,கில் இணைந்தார். மீண்டும் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வில் இணைந்த அவர், அதன்பின் அரசியலை விட்டு ஒதுக்கியிருந்தார். இதனிடையே, கண்ணன் ஆதரவாளர்கள் மீண்டும் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் கண்ணன் புதிய கட்சியை தொடங்க போவதாக தகவல்கள் வெளியானது. லோக்சபா தேர்தலில் கண்ணனை போட்டியிடும்படி அவரின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை. கண்ணன் புதுச்சேரி லோக்சபா தேர்தல் குறித்த தனது ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தார்.இந்நிலையில், கண்ணன் தனது ஆதரவு யாருக்கு? என்பதை தெரிவிக்க போவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். பிரசாரம் முடிவடையும் (16ம் தேதி) பத்திரிகையாளர்களை சந்தித்து எந்த வேட்பாளருக்கு ஆதரவு என்பதை கண்ணன் தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கண்ணன் ஆதரவு யாருக்கு? என்பது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X