கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு | Dinamalar

கொலை மிரட்டல் 4 பேர் மீது வழக்கு

Added : ஏப் 15, 2019
Share
பாகூர்:கோவில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வம்பாபேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி,30; தனியார் மதுக்கடை மேலாளரான இவர், வம்பாபேட் மாரியம்மன் கோவில் நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் நடந்த தீர்த்தவாரியின் போது,

பாகூர்:கோவில் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கிருமாம்பாக்கம் அடுத்துள்ள வம்பாபேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி,30; தனியார் மதுக்கடை மேலாளரான இவர், வம்பாபேட் மாரியம்மன் கோவில் நிர்வாகிகளில் ஒருவராக உள்ளார். கடந்த ஜனவரி மாதம் சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் நடந்த தீர்த்தவாரியின் போது, கிருஷ்ணசாமிக்கும், சக நிர்வாகிகள் சிலருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், வம்பாபேட் கிராமத்தில் நேற்று நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை, கிருஷ்ணசாமி ஒரு தரப்பினருக்கு அழைப்பு விடுக்காமல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், கிருஷ்ணசாமிக்கும், வெங்கடேஷ் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வெங்கடேஷ் தரப்பினர் கிருஷ்ணசாமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில், வெங்கடேஷ், விமல்ராஜ், ஜெகன், விஜயகுமார் ஆகியோர் மீது கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, கொலை மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X