தமிழ்நாடு

தேர்தல் கண்காணிப்பால் விளை பொருட்கள்... அடகு வைப்பு!:வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வருத்தம்;ஆறுதல் அளிக்கும்நெல் வியாபாரம்

Added : ஏப் 15, 2019
Advertisement
தேர்தல் கண்காணிப்பால் விளை பொருட்கள்... அடகு வைப்பு!:வியாபாரிகள் வராததால் விவசாயிகள் வருத்தம்;ஆறுதல் அளிக்கும்நெல் வியாபாரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 30க்கும் மேற்பட்ட அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன. நெல் அறுவடை செய்த விவசாயிகள், கொள்முதல் நிலையத்தில் நெல் வழங்குவதால், நேரடியாக, விவசாயிகளின் வங்கி கணக்கில், பணம் வந்து சேர்ந்துவிடுகிறது. யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படவில்லை என, நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 1.5 லட்சம் ஏக்கரில் நெல், 30 ஆயிரம் ஏக்கரில், வேர்க்கடலை, 1,500 ஏக்கரில், எள் உள்ளிட்ட பயிர்கள், பயிரிடப்பட்டுள்ளன. இவை, அறுவடை செய்யப்படுகின்றன.இந்நிலையில், வரும், 18ம் தேதி நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள், மார்ச், 10ம் தேதி முதல் அமலுக்குவந்துள்ளன.

இந்த விதியில் முக்கியமானது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்வோர், உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், பணம் பறிமுதல் செய்யப்படும். இதற்கு காரணம், தேர்தல் செலவுகளுக்கு, அரசியில் கட்சியினர் கண் மூடித்தனமாக பணம் செலவழிப்பது; வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தான்.

இந்த முறைகேடுகளை கண்காணிப்பதற்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 33 பறக்கும் படை குழு, 33 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த பறக்கும் படை அதிகாரிகளால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆவணமில்லாமல் எடுத்து செல்லப்பட்ட, 10.61 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.இதில், உரிய ஆவணம் காண்பித்ததால், 4.50 கோடி ரூபாயை, தேர்தல் அதிகாரிகள் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனினும், உரிய ஆவணம் காட்டியும், பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சிக்கலால், விவசாயிகள் அறுவடை செய்யும் விளை பொருட்களை வாங்க, வியாபாரிகள் வருவதில்லை.விளை பொருட்கள் வாங்க செல்லும் பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்தால், அதை மீண்டும் வாங்குவது வீண் அலைச்சலாக இருக்கும். இதனால், தேர்தல் முடிந்த பின், விளை பொருட்களை வாங்கலாம் என, வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, வேர்க்கடலை உள்ளிட்ட விளை பொருட்களின் விலை திடீரென சரிவடைந்து உள்ளது.இதனால், பெரும்பாலான விவசாயிகள், தங்களின் விளைப்பொருட்களை குடோன்களில் சேமிக்க துவங்கி உள்ளனர்.இடவசதி இல்லாத விவசாயிகள் சிலர், கூட்டுறவு சேமிப்பு கிடங்குகளில், அடகு வைக்கும் முறையில், சேமிக்க துவங்கி உள்ளனர்.

இது குறித்து, புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் கூறியதாவது:அறுவடை செய்த வேர்க்கடலை உலர்த்திய பின், கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்துள்ளேன். நல்ல விலை விற்கும் போது, அதை மீட்டு, விற்பனை செய்து விடுவேன்.விளை பொருட்களின் மீது வாங்கிய கடனுக்கு வட்டி தான் கூடுதலாகும். அதை பார்த்தால், தேர்தல் நேரத்தில், விளை பொருட்கள் விற்ற பணத்தை, முழுமையாக வீட்டிற்கு எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டால், அது சிக்கல் ஆகும்.இவ்வாறு அவர்கூறினார்.

தென்னேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ஏ.எம்.கண்ணன் கூறியதாவது:தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன், வேர்க்கலை, நல்ல விலைக்கு விற்பனையானது. ஆனால் இப்போது, விலைசரிவடைந்துள்ளது.இருந்தாலும், வந்த விலைக்கு விற்றுவிடலாம் என, நினைத்தால்வியாபாரிகள் வாங்கதயக்கம் காட்டுகின்றனர்.ஆகையால், வேறு வழியின்றி விளை பொருட்களை, வாடகை கட்டடத்தில் இருப்பு வைத்துள்ளேன்.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X