பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவப்படியை உயர்த்த ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

Added : ஏப் 15, 2019
Advertisement

மதுரை:மாத மருத்துவப்படியை ஆயிரம் ரூபாயாக மாநில அரசு உயர்த்த வேண்டும்,' என, மதுரையில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.இச்சங்க வட்ட கிளை மாநாடு தலைவர் பிச்சை தலைமையில் நடந்தது. துணை தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இணை செயலர் ராமன் வரவேற்றார். செயலாளர் மாரிச்சாமி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ராஜாமணி வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். மாநில துணை தலைவர் சங்கரன், பொருளாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட செயலர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் சுரேந்திரநாத், தங்கவேலு மற்றும் நிர்வாகிகள் பேசினர். 80 வயது நிரம்பியவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கிளை செயலர் ராமசாமி நன்றி கூறினார்.ஏழாவது சம்பளக்குழு பரிந்துரையின்படி 21 மாத ஓய்வூதிய திருத்த நிலுவையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக 9000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X