தமிழ்நாடு

கழிவு தருகிறது அழிவு! வாலாங்குளத்தில் பஸ் டிப்போ ஆயில்

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019
Advertisement
 கழிவு தருகிறது அழிவு! வாலாங்குளத்தில் பஸ் டிப்போ ஆயில்

கோவை:அரசு போக்குவரத்துக்கழக டிப்போக்களில், பஸ்கள் பராமரிப்பின்போது வெளியேற்றப்படும் ஆயில் கலந்த கழிவுநீர், வாலாங்குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலந்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தடுக்க வேண்டிய மாசுக்கட்டுப்பாடு வாரியம், வேடிக்கை பார்க்கிறது.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மண்டலங்கள் உள்ளன. கோட்டத்தின் கீழ் உள்ள, 45 பஸ் டிப்போக்களில் தலா, 100 பஸ்கள் வரை சுத்தப்படுத்துதல், கோளாறுகளை சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொழில்நுட்ப பணியாளர்கள், பஸ்களில் கோளாறுகளை சரிசெய்வது, டயர் மாற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்கின்றனர். தவிர, பஸ்களை தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்துவது, 15 ஆயிரம் கி.மீ.,க்கு ஒருமுறை, ஆயில் சர்வீஸ் செய்யும் பணிகளும், டிப்போக்களில் நடக்கின்றன.இவ்வாறு சுத்தப்படுத்தும்போது, வெளியேற்றப்படும் கழிவுநீரை, முறையாக சாக்கடை கால்வாய்கள் வாயிலாக வெளியேற்றாமல், நீர் நிலைகளில் நேரடியாக கலக்குவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உதாரணமாக, சுங்கம் பஸ் டிப்போவில் இருந்து வெளியேறும் ஆயில் கலந்த கழிவுநீர், வாலாங்குளத்தில் நேரடியாக கலக்கிறது.அதேபோல், உக்கடம், ஒண்டிப்புதுார் டிப்போக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், அருகாமையில் இருக்கும் நீர் நிலைகளில், நேரடியாக வெளியேற்றப்படுவதாக, சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.ஆயில் கலந்த இந்த கழிவுநீர், நீர் நிலைகளை மாசுபடுத்துவதுடன், இந்த நீரை அருந்தும் பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் ஆயுளையும் குறைக்கின்றன.சென்னையில் உள்ள சில டிப்போக்களில், மறுசுழற்சிக் கூடம் வாயிலாக கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

கோவை டிப்போக்களிலும் இது போல், மறுசுழற்சி வசதிகளை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த, மாசுக்கட்டுப்பாடு வாரியம் முன் வர வேண்டும்.'நடவடிக்கை எடுக்கப்படும்'அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ''இன்ஜின் கோளாறுகள், பொள்ளாச்சியில்தான் சரிசெய்யப்படுகின்றன. எனவே, ஆயில் கழிவுகள் வெளியேற வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X