அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிங்கம்புணரியில் பா.ஜ., பிரசாரம்

Added : ஏப் 15, 2019
Advertisement

சிங்கம்புணரி:சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜா பிரசாரம் செய்தார். அப்போது ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார்.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., வேட்பாளராக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார். இவர் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் வாக்குகள் சேகரித்தார். உப்புச்செட்டியார் தெரு, கூத்தாடியம்மன் கோவில் தெரு, சந்திவீரன் கூடம், செல்வவிநாயகர் கோவில் தெரு, அரணத்தங்குன்று, வேட்டையன்பட்டி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண் குழந்தை ஒன்றுக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார். பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: இந்த நாடு பயங்கரவாதிகள் இல்லாத நாடாக, பாதுகாப்பாக, ஏழை எளிய மக்கள் முன்னேறக்கூடிய நாடாக அமைய, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வர வாக்களிக்க வேண்டும், என்று பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X