கன்னிவாடி:சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அரசியல் கட்சியினர் வேட்பாளர் பெயர், சின்னம் கொண்ட பூத் சிலிப்களை வீடுவீடாக வினியோகித்து வந்தனர். முறைகேடுகளுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்ததால். விபரங்களற்ற சிலிப் வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டது.தற்போது வாக்காளர் போட்டோவுடன் கூடிய பூத் சிலிப்களை, தேர்தல் ஆணையமே வழங்குகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சக்திவேல் : ஆத்துார் தொகுதியில் தருமத்துப்பட்டி, கசவனம்பட்டி, கன்னிவாடி, தெத்துப்பட்டி, மாங்கரை வருவாய் கிராமங்களில் பல இடங்களில் அலுவலர்கள் வினியோக பணியில் மந்தமாக உள்ளனர்.பொது சேவை மையம், கலையரங்கம், கோயில் போன்ற இடங்களில் மொத்தமாக குவித்து வைத்து, வாக்காளர்களே தேடி எடுத்து கொள்ளும்படி கூறுகின்றனர். பலர் வேறு நபர்களின் சிலிப்களை எடுத்து சென்றனர். சில கிராமங்களில் அரசியல் கட்சியினர் மொத்தமாக எடுத்து வைத்து கொள்கின்றனர். பூத் சிலிப் பெற அரசியல் கட்சியினரை எதிர்நோக்க வேண்டியுள்ளது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE