வேட்பாளரின்றி பிரசாரம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளரின்றி பிரசாரம்

Added : ஏப் 15, 2019

கன்னிவாடி:தேர்தல் பிரசாரத்திற்காக வி.ஐ.பி.,க்கள் வரும்போது, அறிமுகப்படுத்தி ஆதரவு கேட்கும் வகையில் வேட்பாளர் கைகூப்பியபடி உடன் நிற்பது வழக்கம். பொதுக்கூட்ட மேடைகள் மட்டுமின்றி திறந்தவெளி, வாகன பிரசாரத்திலும் இதே 'பார்முலா' பின்பற்றப்பட்டு வருகிறது. நடிகர்கள் பிரச்சாரத்தின் போது மட்டுமே வேட்பாளர்கள் உடன் இருப்பதில்லை.ஆனால், நடப்பாண்டு தலைவர்கள் வரும்போது வேட்பாளர்கள் உடன் இருப்பதில்லை. திண்டுக்கல்லில் இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் சமீபத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் வேலுச்சாமி உடன் இல்லை. வேட்பாளர் இல்லாததால், பொத்தாம் பொதுவான பிரசாரமாகவே அது அமைந்தது. அதே போல் நேற்று வைகோ கன்னிவாடியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போதும் வேட்பாளர் இல்லை. இதே நிலைதான் அ.தி.மு.க.,விலும் உள்ளது. வி.ஐ.பி., பிரசாரத்தின்போதே காணமுடியாத வேட்பாளரை, வெற்றிக்குப்பின் எங்கே சென்று தேடுவது? என, தொண்டர்களே புலம்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X