பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வளாகத்திற்கு வந்த ரயில்

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, ரயில் போல் வர்ணம் பூசப்பட்டுள்ள அரசு துவக்க பள்ளியை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
பெரம்பலூர், சிறுவாச்சூர் கிராமத்தில், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி உள்ளது. 1949ம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் கக்கன், இப்பள்ளியை திறந்து வைத்தார். தமிழகத்தில், ஆதிதிராவிடர் மக்களால் நடத்தப்படும் ஒரே பள்ளி என்ற பெருமைக்குரிய இப்பள்ளியை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகி, நடத்தி வருகிறார். தற்போது, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 127 மாணவ மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியை ரேணுகா உட்பட, ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு, ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த, சிறுவாச்சூர் ஆதிதிராவிடர் மக்கள், 1.25 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். இதில், பள்ளி வகுப்பறையில் பழுதடைந்த ஜன்னல், கதவுகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சீரமைத்தனர். வகுப்பறைகளுக்கு மின்சாதன வசதிகள் செய்து கொடுத்தனர்.

தமிழகத்தில், ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக, பெரம்பலூர் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட மக்களில் பலர், இன்னும் ரயில் ஓடுவதை பார்த்ததில்லை. இதனால், பள்ளியின் கட்டட சுவருக்கு, ரயிலை போன்று வர்ணம் தீட்டினால் வித்தியாசமாக இருக்கும் என முடிவெடுத்து, அதை, 1 லட்சம் ரூபாய் செலவில், செய்து முடித்தனர். ரயில் பெட்டிகள், வாசல் மற்றும் படிக்கட்டுகள், ஜன்னல்கள் என, தத்ரூபமாக, சுவருக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாக சுற்றுச்சுவருக்கும் பல வண்ணங்களில் வர்ணம் தீட்டி, அதில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் வரையப்பட்டுள்ன.சற்று தள்ளி நின்று பார்த்தால், ரயில் வந்து நிற்பது போலவே காட்சியளிக்கிறது. இதை, அருகில் உள்ள பல்வேறு கிராம மக்களும் வியப்புடன் பார்வையிடுவதுடன், அதன் முன் நின்று, 'செல்பி' எடுத்தும் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-ஏப்-201910:38:36 IST Report Abuse
D.Ambujavalli அருமை பள்ளிச் சுவர்களில் கிறுக்கல் வேண்டாத செய்திகள் என்று நாசம் செய்யாது, நன்கு க்ரியேட்டிவாக செய்துள்ளனர் பள்ளி ஆசிரியர் குழு, மாணவச் செல்வங்கள், நிதியும் ஒத்துழைப்பும் நல்கிய பொதுமக்கள் யாவர்க்கும் பாராட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201909:10:41 IST Report Abuse
Srinivasan Kannaiya எல்லோருமே இதை அனுசரிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X