ஒரு ஓட்டு கூட பதிவாகாத அந்தமான் தொகுதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒரு ஓட்டு கூட பதிவாகாத அந்தமான் தொகுதி

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (28)

புதுடில்லி : அந்தமான் - நிகோபார் தீவுகளின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு லோக்சபா தொகுதி ஓட்டுச்சாவடியில் ஒரு ஓட்டுக் கூட பதிவாகவில்லை என்பது தெரிய வந்துள்ளது.





நிகோபார் தீவுகளில் உள்ள சோம்பன் ஹட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடியில் தான் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊரில் வசிப்பவர்கள் இன்னும் கற்கால வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். 2014 ம் ஆண்டு தேர்தலின் போது 2 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். நிகோபர் தீவில் வசிப்பவர்கள் முதன் முறையாக ஓட்டளித்தது அப்போது தான்.




இது குறித்து அந்தமான் - நிகோபர் தீவுகளுக்கான தலைமை தேர்தல் அதிகாரி கே.ஆர்.மீனா கூறுகையில், நாங்கள் 66 தேர்தல் பணியாளர்களை கொண்ட 2 ஓட்டுச்சாவடிகளை அமைத்திருந்தோம். சோம்பன் ஹட் பகுதியில் 22 வாக்காளர்கள் உள்ளனர். மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஓட்டளிப்பதற்கான அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்திருந்தோம். இருந்தும் இந்த ஆண்டு ஒருவர் கூட ஓட்டளிக்கவில்லை. இப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் காட்டின் உட்பகுதியில் வசிப்பதால் வாரத்திற்கு ஒருமுறை அல்லது எப்போதாவது தான் ரேசன் பொருட்களை வாங்க வெளியே வருகிறார்கள்.

இந்த மக்களை தேடிச் சென்று, தேர்தல் நடைபெற உள்ள தகவலை தெரிவித்தோம். ஏப்.,11 அன்று தேர்தல் நடைபெறுவதையும் அவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழியில் தெரிவித்தோம். இருந்தும் யாரும் வரவில்லை. உள்ளூர் வாசிகளை தொடர்பு கொண்டு பேசியும், பல நடவடிக்கைகள் எடுத்தும் யாரும் வர விரும்பவில்லை. அந்த மக்கள் இருக்கும் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசு அறிவித்துள்ளதால் அரசியல் கட்சிகள் யாரும் அங்கு செல்லவில்லை. அதனால் அவர்களை எங்களால் கட்டாயபடுத்த முடியவில்லை என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X