டிக் டாக் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'டிக் டாக்' தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (8)
டிக் டாக், நீதிமன்றம் தடை, தடை நீக்க மறுப்பு,

புதுடில்லி : 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சில நாட்கள் முன்னர் 'டாக் டாக்' செயலிக்கு தடை விதித்திருந்தது. இதனை பதிவிறக்கம் செய்வதையும் தடைசெய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்குமாறு சீன நிறுவனமான 'டிக் டாக்' உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், 'டிக் டாக்' செயலிக்கு உயர்நீதிமன்றக் கிளை விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்ற நீதிபகள் மறுத்துவிட்டனர். நாளை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தடையை நீக்க முடியாது என்று மறுத்தனர்.மேலும், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 22 க்கு ஒத்து வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




முன்னதாக, மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் முத்துகுமார் டிக்டாக் செயலி ஆபாசம், கலாசார சீரழிவு, குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், தற்கொலை ஆகியவற்றை ஊக்குவிப்பதாக கூறி அதைத் தடை செய்ய வலியுறுத்தினார்.

இதனை ஏற்று உயர் நீதிமன்றம் பிரபலமான சீன வீடியோ ஆப்பான டிக்டாக் “ஆபாசத்தை ஊக்குவிப்பதாக” கூறி அதை தடை செய்ய அரசாங்கத்திற்கு உத்தரவிட்ட நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மன் சிங்வி ஆஜரானார்.

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை டிக் டாக் இன் பதிவிறக்கத்தை மத்தியில் தடை செய்யக் கேட்டிருந்தது. இந்த ஆணை டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி வீடியோ வெளியிடுவது ஒளிபரப்புவதையும் தடை செய்யும் விதத்தில் இருந்தது.
டிக்டாக் ஆப் இந்தியாவில் 54 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்டுள்ளது.டிக்டாக் ஆப் 2019 ஆம் ஆண்டு சமூக வலைதள வீடியோ ஆப்பாக தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் இதன் தரவிறக்கம் ஒரு பில்லியனை எட்டியது.
“நாங்கள் தகவல் தொழில் நுட்ப விதிகள், 2011ஐ முழுமையாகக் கடைப்பிடித்து வருகிறோம்… சட்ட அமலாக்கம் மூலம் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெற இந்தியா சார்பாக தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக” டிக்டாக் ஆப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

உயர் நீதிமன்றம் ஏப்ரல் 16க்குள் தடை செய்ய மத்திய அரசினை கேட்டுக் கொண்டது. நீதிமன்றம் டிக்டாக் “ஆபத்தான அம்சம்” மற்றும் “பொருத்தமற்ற உள்ளடக்கத்தை” கொண்டுள்ளதாக கூறியிருந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X