சசி தரூருக்கு தலையில் காயம்| Dinamalar

சசி தரூருக்கு தலையில் காயம்

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (15)
சசி தரூர், காங்கிரஸ், காயம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் சசிதரூர். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பூஜை செய்தார். தொடர்ந்து எடைக்கு எடை வாழைப்பழம் வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்டார். அப்போது, தராசு உடைந்ததில் சசிதரூர் கீழே விழுந்தார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளன. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X