அரசியல் செய்தி

தமிழ்நாடு

வியூகம் மாற்றும் அ.தி.மு.க.,

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (68)
Advertisement
அதிமுக, பா.ஜ., பாஜ,A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தல் வியூகம்

சென்னை: சட்டசபையில், அ.தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், இரண்டரை ஆண்டுக்கு மேலாக ஆட்சியில் நீடிக்க முடிகிறது என்றால், மத்திய அரசும், அதை நடத்தும், பாரதிய ஜனதாவும் தான் காரணம். இதற்கு நன்றிக் கடனாகத் தான், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்திருக்கிறது,

எம்.ஜி.ஆர்., தொடங்கி, ஜெயலலிதா வளர்த்த திராவிட கட்சி. ஜெயலலிதாவால் நிராகரிக்கப்பட்ட, பா.ஜ., அரசின் கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றை, பழனிசாமி, பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு ஏற்று செயல்படுத்தி வருகிறது. இது அவசியம் கருதி செய்யப்படும், 'அட்ஜஸ்ட்மென்ட்' தவிர, கொள்கை, உடன்பாடு கிடையாது. அதாவது, வேறுபாடுகள், தரைவிரிப்புக்கு கீழே காலால் தள்ளப்பட்டிருக்கிறதே தவிர, எரித்து சாம்பலாக்கப்படவில்லை.இப்போது, திடீரென அவை, தரை விரிப்பின் அடியிலிருந்து தலைதுாக்கி பார்ப்பதால், அ.தி.மு.க., தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, 'நீட்' தேர்வுக்கு எதிராக, அ.தி.மு.க., நிலைப்பாடு எடுத்துள்ள சூழலில், அது ரத்து செய்யப்பட மாட்டாது என, பா.ஜ.,வின் தமிழக பொறுப்பாளரான அமைச்சர் பியுஷ் கோயல் கூறியதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


அடுத்து, எட்டு வழி சாலை திட்ட தீர்ப்புக்கு எதிராக, 'அப்பீல்' செய்வதில்லை என, அ.தி.மு.க., தலைமை முடிவு எடுக்கும்போது, 'அந்த திட்டத்தை எப்படியும் நிறைவேற்றுவோம்' என்கிறார் அமைச்சர் நிதின் கட்கரி. ஏற்கனவே, பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகளுடன், இந்த விஷயத்தில் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கும்போது, பா.ஜ., அமைச்சர்களின் பேச்சு, புது தலைவலியாக குடைகிறது.


பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததால், சிறுபான்மை மக்களுக்கு, அ.தி.மு.க., மீது கோபம் வரும் என்பது தெரிந்தாலும், பிரசாரத்தில் அதை போக்கிவிடலாம் என, மேலிடத்தில் திட்டமிட்டு இருந்தனர். பா.ஜ., நிற்கும் தொகுதிகளில் வேண்டுமானால், சிறுபான்மையினர் ஓட்டுகள் எதிர் கூட்டணிக்கு போகுமே தவிர, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் போக மாட்டார்கள் என, அவர்கள் நம்பினர்.

அந்த நம்பிக்கை, உளவுத்துறை அறிக்கையால் ஆட்டம் கண்டுவிட்டது. தென் மாவட்டங்களில், கணிசமாக இருக்கும் கிறிஸ்துவர்கள், சர்ச்சுகளில் கூட்டம் போட்டு, 'மோடியை தாங்கி பிடிக்கும், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்கக் கூடாது' என, தீர்மானம் போட்டு வருகின்றனர். இதே போன்ற தீர்மானத்தை, பள்ளிவாசல் தொழுகைக்கு பின்னர், முஸ்லிம்களும் எடுத்து வருவதாக உளவுத்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரையில், அமைச்சர் செல்லுார் ராஜு, நாமக்கல்லில், அ.தி.மு.க., வேட்பாளர் காளியப்பன் என, பலரும் மசூதிகளுக்கு ஓட்டுக் கேட்க சென்ற போது, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.ஆட்சிக்கு பாதுகாப்பு அளித்த கட்சியே, ஆட்சியை இழக்க காரணமாகி விடுமோ என்ற பதற்றம் இருந்தாலும், பா.ஜ.,வுக்கு எதிரான சிறுபான்மையினரின் அம்புகள், தன் மீது தைக்காமல் தடுக்க, அக்கட்சி எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

'பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் முஸ்லிம் பிரமுகர்களையும், நிர்வாகிகளையும் அழைத்து, 'முஸ்லிம்களை சமாதானப்படுத்துங்கள். மசூதிகள், பள்ளிவாசல்களுக்கு செல்லுங்கள்' என, கேட்டுக் கொண்டுள்ளனர். 'காலத்தின் கட்டாயத்தால், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறோமே தவிர, அவர்களின் கொள்கை, கோட்பாடுகளை, அ.தி.மு.க., ஏற்கவில்லை. ஜெ., ஆட்சியில் தான், முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் தரப்பட்டன; நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது; உலமாக்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டன; 'ஹஜ்' செல்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன. இதையெல்லாம் ஞாபகப்படுத்தி, முஸ்லிம் ஓட்டுகளை திரும்ப கொண்டுவாருங்கள்' என, முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.


தலைமையில் இருந்து வந்த உத்தரவு என்பதால், அ.தி.மு.க.,வில் ஒதுங்கி நின்ற முஸ்லிம் தலைவர்கள், நிர்வாகிகள் அதை செயல்படுத்த களம் இறங்கி வருகின்றனர். அ.தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலர் அன்வர் ராஜா, ராமநாதபுரம் லோக்சபா தொகுதியை விட்டு விட்டு, இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதியான ஆம்பூரில் முகாமிட்டு, முஸ்லிம்களுடன் பேசி வருகிறார்.


இடைத்தேர்தல் நடக்கும் ஏனைய தொகுதிகளுக்கும், முஸ்லிம் தலைவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.,வுக்கு சாதகமான கிறிஸ்துவ ஆயர்கள், முக்கியஸ்தர்கள் மூலமாக அந்த மதத்தினரின் கோபத்தை தணிக்கும் திட்டமும் செயலுக்கு வந்திருக்கிறது.

மத்தியில் மீண்டும், பா.ஜ ஆட்சி வரவிடக் கூடாது என்பதில், சிறுபான்மையினர் உறுதியாக இருப்பதாக தெரிந்தால், 'லோக்சபா தேர்தலில் எப்படி வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள்; ஆனால், சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கண்டிப்பாக, இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்' என்ற கோஷத்தை இறுதி அஸ்திரமாக பயன்படுத்த, அ.தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளது.

பா.ஜ., பொறுப்பாளர்களிடம் பழனிசாமி மனம் விட்டு பேசியதாகவும், நிலைமையை முழுவதுமாக புரிந்து வைத்திருப்பதால், பா.ஜ., தரப்பில் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும், அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், பா.ம.க., - தே.மு.தி.க. ஆகியவை கூட்டணி தர்மத்தை, அ.தி.மு.க., மீறுவதாக குமுறுகின்றன.
-வி

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok - Trichy,இந்தியா
18-ஏப்-201907:46:29 IST Report Abuse
Ashok சிறுபான்மை மக்களை கட்டம் கட்டி தான் நமது மதத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்று சிறுபான்மை மக்கள் பெருமான்மை மக்களை அந்த நிலைக்கு தள்ளாமல் இருக்க வேண்டும் அல்லது பெருமான்மை மக்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் சிறுமை படுத்த படுவதை நிறுத்த வேண்டும். 71 ஆண்டுகளாக வாக்கு வங்கி என்பதனால் தவறான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சீரளிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணரதவறும் நிலையில் அதற்கான விலையை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற கசப்பான உண்மையை ஏற்கும் காலம் வெகு சீக்கிரம் வரும்.
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
16-ஏப்-201913:47:01 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் EPS - OPS லேசுப்பட்ட ஆட்கள் இல்லை என்பது, சசி-தினகரனை ஓரங்கட்டி முதல்வர்களாகி, பாஜகவுக்கு 5 சீட் ஒதுக்கிய போதே தெரிந்துவிட்டது. பாஜகவுக்கும் இது நன்கு தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
16-ஏப்-201911:12:01 IST Report Abuse
Jaya Ram இதைத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் பிஜேபியுடன் கூட்டணி வேண்டாம். வேண்டுமென்றால் தொகுதி உடன்பாடு மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்று, அவர்களுக்கு தமிழர்களின் நிலைப்பாடு புரியாது மேலும் அதை எடுத்துச்சொல்வதற்கு சரியான ஆட்களும் அக்கட்சியில் இல்லை எதிர்க்கட்சி என்ன நிலைப்பாடு எடுக்கிறது அதற்கு தகுந்தாற் போல் செயல்படனும் ஆனால் இவர்கள் என்னவோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் பேசுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X