உலக கோப்பை.., இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உலக கோப்பை.., இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (32)
TeamIndia, WorldCup2019, CWC19, Vijay Shankar, Rishabh Pant, MSK Prasad, உலக கோப்பை, கிரிக்கெட், இந்திய அணி, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்,

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தமிழத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை.

இங்கிலாந்தில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ல் துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் 'ரவுண்டு ராபின்' முறையில் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் பங்கேற்கும் அணிகள் விவரம் வரும் 23ம் தேதிக்குள் அறிவிக்கப்பட உள்ளன. இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.


தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்


இதற்கான இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சார்பில் தேர்வுக்குழு கூட்டம் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் மும்பையில் நடந்தது. முடிவில் அணி விவரம் வெளியானது. இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டனாக தொடர்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழகத்தின் சார்பில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு இடம் கிடைத்தது.





அணி விவரம்: கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி, தினேஷ் கார்த்திக், ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, விஜய் சங்கர், குல்தீப், சகால், பும்ரா, புவனேஷ்வர், ஷமி.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X