குட்கா, பான் மசாலா நிரந்தரத் தடை ; அரசு பதிலளிக்க உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குட்கா, பான் மசாலா நிரந்தரத் தடை ; அரசு பதிலளிக்க உத்தரவு

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (1)
குட்கா, பான் மசாலா, நிரந்தரத் தடை, அரசு

மதுரை : குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க கோரும் வழக்கில், பதிலளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் குட்கா, பான்பராக் போன்ற புகையிலை பொருட்களை நிரந்தரமாகத் தடை செய்து அரசாணை வெளயிடவேண்டும் என்று வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசு சார்பில் பதிலளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சக செயலர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, ''பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களுக்கு நிரந்தரத்தடை விதிக்காமல், அரசாணையை ஆண்டுக்கு ஆண்டு நீட்டித்துச் செல்வது ஏன்?'' என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X