கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்கவேண்டும் - நீதிபதி

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (9)
Advertisement
அரசுப்பள்ளி, ஆசிரியர்கள், நீதிபதி கண்டிப்பு, பயோ மெட்ரிக்

சென்னை : அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை எதிர்த்து வழக்கு தொடுத்த ஆசிரியரிடம், 'அடிப்படை உரிமை பாதிக்கப்படுவதாக நினைத்தால், பணியிலிருந்து விலகிக்கொள்ளலாம்,'' என்று கண்டிப்புடன் கூறிய நீதிபதி, அரசுப்பணியில் தொடர நினைத்தால், அரசின் கொள்கைகளையும் பணி விதிகளையும் பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

அதிக சம்பளம் வழங்கியும் மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் அதிகரிக்காததால், பெற்றோர் அதிருப்தியின் உள்ளனர். அரசின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள ஆசிரியர், மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தை கற்றுத்தருவார், என்றும் காட்டமுடன் கேள்வி எழுப்பினார்.

மேலும், கல்வித்துறையில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கருத்து தெரிவித்த நீதிபதி, அரசுபள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க வேண்டும்,' என்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை எதிர்த்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201921:19:45 IST Report Abuse
Bhaskaran சபாஷ் சரியான தீர்ப்பு ஆனால் ஜாக்டோ ஜியோ இதனை எதிர்ப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-ஏப்-201921:02:28 IST Report Abuse
அசோக்ராஜ் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றல் கேட்டு அதிக விண்ணப்பங்கள் வரும்.
Rate this:
Share this comment
Cancel
15-ஏப்-201920:25:38 IST Report Abuse
Boopathi Subramanian இதுதான் தனக்கு தானே வைக்கும் ஆப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X