ஜார்கண்டில் துப்பாக்கிச் சூடு : சி.ஆர்.பி.எப் வீரர் பலி

Added : ஏப் 15, 2019
Advertisement
 ஜார்கண்ட் , துப்பாக்கிச் சூடு , சி.ஆர்.பி.எப் , நக்சலைட்

ராஞ்சி : ஜார்கண்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதிஹ் மாவட்டத்தில் பெல்பா காட் வனப்பகுதிகளில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்க தகவல் கிடைத்தது. தொடரந்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். திடீரென மறைந்திருந்து நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 நக்சல்களும் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் ,பைப் வெடிகுண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X