அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் ரெய்டு; அமைச்சர் உதயகுமாருக்கு சம்மன்

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (17)
Advertisement

சென்னை: எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் நடந்த ரெய்டை தொடர்ந்து, அமைச்சர் உதயகுமாருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அறையில் கைப்பற்றப்பட்ட துண்டு சீட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்னும் மூன்று நாட்களில் நடக்க உள்ளன. இதனால் வாக்காளர்களின் ஓட்டுக்களை வளைக்க, அரசியல் கட்சியினர், பரிசுப்பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா செய்வதாக, தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, 77 தேர்தல் பறக்கும் படை மற்றும், 77 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சென்னையில் உள்ள மூன்று லோக்சபா தொகுதிகள், பெரம்பூர் சட்டசபை தொகுதி ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் பெரம்பூர் சட்டசபை தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் பணம் பிரிக்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு, 10:30 மணியில் இருந்து எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் அதிரடி சோதனை நடந்தது. 'பி பிளாக்'கில் உள்ள, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் விடுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர்.

வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரின் விடுதியிலும், சோதனை நடந்தது. இந்நிலையில் அமைச்சரின் அறையில் இருந்த பைகளில் சில துண்டு சீட்டுகள் கைபற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Prasad - Chennai,இந்தியா
16-ஏப்-201913:00:47 IST Report Abuse
Krishna Prasad துண்டு சீட்டு என்றால் சுடலைகிட்ட தானே போயிருக்கணும்
Rate this:
Share this comment
Cancel
Soundar - Chennai,இந்தியா
16-ஏப்-201911:33:28 IST Report Abuse
Soundar Hope Modiji in his coming term as Perennial Prime Minister of India will find ways to end money for vote culture. One of the measure that Modiji should do is to demonetise 200, 500 and 2000 rupees notes so that carrying large amount of cash would be extremely difficult.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஏப்-201911:10:24 IST Report Abuse
Malick Raja தமிழகத்தின் சாபக்கேடுகள் கூடியவிரைவில் அகல விளைவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X